search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்கள் விலை அதிகரிப்பு"

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை வீதிகளில் வைக்கவும் பிரதிஷ்டை செய்யவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
    • 31-ந் தேதி சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக நகரின் முக்கிய வீதிகளில் சிறியது முதல் பெரியது வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

    நாகர்கோவில், ஆக. 30-

    நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி விழா. இந்த நாளில் விநாயகர் சிலைகளை வீடுகள் மற்றும் வீதிகளில் வைத்து வழிபாடு செய்வதும் பின்னர் அந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதும் வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை வீதிகளில் வைக்கவும் பிரதிஷ்டை செய்யவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் விநாயகர் சதுர்த்தி விழா களையிழந்து இருந்தது.

    இந்த ஆண்டு விநாயகர் சிலை பிரதிஷ்டை மற்றும் ஊர்வலத்திற்கான தடை விலக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடுகள் நாடு முழுவதும் கோலா கலமாக நடந்தது.

    31-ந் தேதி சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக நகரின் முக்கிய வீதிகளில் சிறியது முதல் பெரியது வரையிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன.

    குமரி மாவட்டத்திலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்சிச் சென்றனர்.

    விநாயகர் சதுர்த்தி விழாவை நாளை (31-ந் தேதி) கொண்டாடுவதற்காக வீடுகளில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மக்கள் செய்தனர். வீதிகளிலும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு விரிவான ஏற்பாடுகளை அந்தந்த பகுதியினர் செய்தி ருந்தனர்.

    இதற்காக பெரிய விநாயகர் சிலைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இருந்தாலும் அதனுடன் வைக்க சிறிய விநாயகர் சிலைகளை பலரும் ஆர்வத்துடன் இன்று வாங்கினர். மேலும் சிறுவர்-சிறுமிகள் தாங்கள் கைகளில் வீடு வீடாக எடுத்துச் செல்வதற்காக விநாயகர் சிலைகளை வாங்கினர்.

    இதேபோல் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டு பொருட்கள் விற்பனையும் இன்று களைகட்டி காணப்பட்டது. குறிப்பாக பூக்கள், பழங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றார்கள்.அவர்கள் வசதிக்காக குமரி மாவட்டம் முழுவதும் மார்க்கெட்டுகளில் பூக்கள், பழங்கள் மற்றும் பூஜை பொருட்கள் ஏராளமாக விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளன.

    தோவாளை பூ மார்க்கெ ட்டில் இன்று மொத்த வியாபா ரம் மட்டுமின்றி சில்லறை வியாபாரமும் அதிக அளவில் இருந்தது. கோட்டார், வடசேரி உள்ளிட்ட பல பகுதிகளிலும் சதுர்த்தியை கொண்டாட பூக்கள், பழம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை அமோக மாக நடந்தது.

    ஆனால் விற்பனை வேகத்திற்கு ஏற்ப பொருட்களின் விலையும் ஏற்றம் கண்டிருந்தது. வழக்கமான நாட்களில் விற்கப்படும் பழங்கள் மற்றும் பூக்கள் விலை இன்று 3 மடங்கிற்கு மேல் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் நாளை விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடும் எண்ணத்தில் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

    • முகூர்த்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மார்க்கெட்டில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது
    • தொடர் முகூர்த்தம் மற்றும் கோவில் திருவிழாக்களால் வாழை இலை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    திண்டுக்கல் :

    தொடர் முகூர்த்த நாட்களை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று ரூ.300க்கு விற்பனையான மல்லிகை பூ தற்பொழுது ரூ.1300-க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    திண்டுக்கல் நகரின் மையப்பகுதியான அண்ணா வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செம்பட்டி, ஆத்தூர், நரசிங்கபுரம், தாடிக்கொம்பு, சாணார்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    மேலும் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து கரூர், சேலம், நாமக்கல்,சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் ஆந்திரா,கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முகூர்த்த தினங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து விற்பனையாகி வந்தது.

    தற்பொழுது தொடர்ந்து 5 நாட்கள் வரும் முகூர்த்த நாட்கள் வருவதால் நேற்று ரூ.300-க்கு விற்பனையான மல்லிகை பூ தற்போது ரூ.1,500-ம், ரூ.200-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.500-க்கும் விற்கப்பட்டது.

    மேலும் ரூ.250-க்கு விற்பனையான முல்லைப்பூ ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.150, செவ்வந்தி ரூ.200, பன்னீர் ரோஸ் ரூ.100, அரளிப்பூ ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தொடர் முகூர்த்தத்தின் காரணமாக நேற்றைவிட இன்று பூக்களின் விலை 5 மடங்கு உயர்ந்து விற்பனையாகி வருவதால் பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் தொடர் முகூர்த்தம் மற்றும் கோவில் திருவிழாக்களால் வாழை இலை விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் வாழை இலை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×